ஆசிரியர் தனது மாணவர்களை கொண்டு தென்னை ஓலை, வாழை இலை, மந்தாரை இலையால் அமைக்கப்பட்ட திருமண நிச்சயதார்த்த மேடை சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பாராட்டை பெற்று வருகின்ற்து\r\n\r\n\r\nபுதுச்சேரி சேலியமேடு பகுதியில் கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் சுயஉதவி குழு பெண்களுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு நுண்கலை பயற்சி அளித்து வருகின்றார். \r\n\r\nகுறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும் தென்னை, பனை மரங்களிலிருந்து விழுந்து ஓலை, சுரை குடுவை, மூங்கில்களை கொண்டு கலைப்பொருட்களை செய்து அசத்தி வருகின்ற்னர்.\r\n\r\nமேலும் திருமணம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் விடுமுறை தினத்தில் தனது பள்ளியில் படிக்கும் 7,8,9 வகுப்பு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை கொண்டு வித்தியாசமான கலை நயத்தை வெளிப்படுத்தி வருகின்றார் . இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை 10 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் ஒரு திருமண அலங்காரத்தை செய்து உள்ளார். \r\n\r\nபாகூர் பகுதியில் உள்ள அமர்நாத் மற்றும் காவியா என்பார்கள் திருமண நிச்சயதார்த்த மேடை அலங்காரம் முழுவதும், தென்னை ஓலை, மந்தார இலை, வாழை இலை, பூக்கள் கொண்டு வடிவமைத்து உள்ளார். இந்த போட்டோ மற்றும் வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவி பாராட்டை பெற்று வருகின்றது.
