Saturday, December 6, 2025
Homeநாகப்பட்டினத்தில் காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு.

நாகப்பட்டினத்தில் காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு.

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. \r\n\r\nஇதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். \r\n\r\nமுன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் போலீசார் கலந்து கொண்டனர்.\r\n\r\nநாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.\r\n\r\n\r\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments