திருநெல்வேலி,அக்.22:- தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள, “புதுப்பட்டி” கிராமத்தை சேர்ந்தவர் செல்வகோடி ( வயது.40), நெல்லை மாவட்டம், முக்கூடலை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது.55), மற்றும் முக்கூடலை அடுத்துள்ள, சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஜோசப் ராஜசிங்(வயது.60) ஆகிய மூவரும், “முக்கூடல்” மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை, விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு, “ரகசிய தகவல்” கிடைத்தது. \r\n\r\nநம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற, அந்த தகவலின் அடிப்படையில், இன்று (அக்டோபர்.22) காலையில், “உதவி ஆய்வாளர்”ஆல்வின், மற்றும் “தனிப்படை” போலீசார், முத்துராஜ் கடையை, “திடீரென” சோதனை செய்தனர். அப்போது, “தடைசெய்யப்பட்ட” பொருட்களை, விற்பனைக்காக வைத்திருப்பது, தெரியவந்தது. \r\n\r\nசட்டவிரோதமான இந்த செயல்களின் அடிப்படையில், செல்வகோடி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரையும், “கைது” செய்த, “உதவி ஆய்வாளர்” ஆல்வின் தலைமையிலான, “தனிப்படை” போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, மொத்தம் 35 கிலோ புகையிலை பொருட்களை, “பறிமுதல்” செய்தனர். \r\n\r\nஇருவரையும்,\r\nநீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதற்கான, நடவடிக்கைகளை, போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
