அக்.21:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், வடக்கன் குளம் “பேருந்து நிலையம்” வளாகத்தில்,”வடக்கன் குளம் ஊராட்சி” சார்பில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், “புதிய” உயர் தொழில்நுட்பத்தினால் ஆன, அதிநவீன “சுகாதார வளாகம்” கட்டப்படவுள்ளது. \r\n\r\nஇதற்கான, அடிக்கல் நாட்டு விழா, இன்று (அக்டோபர்.21) காலையில், பேருந்து நிலைய வளாகத்தில், நடைபெற்றது. “வடக்கன்குளம் ஊராட்சி தலைவர்” எம்.ஜான் கென்னடி, இவ்விழாவிற்கு “தலைமை” வகித்து, சுகாதார வளாகத்துக்கான, “அடிக்கல்” நாட்டினார். \r\n\r\nநிகழ்ச்சியில், “துணைத்தலைவி” கே.பாக்கிய செல்வி, “வடக்கன்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்” எஸ்.வெங்கடேஷ் தனராஜ், “வடக்கன் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்” பொன்பாண்டி, கோகிலம் அய்யாக்குட்டி, அகிலாதேவி,தங்கம், ஆனந்த், சரோஜினி, அமிர்தராஜ், பிரின்ஸ், தாஸ், சுரேஷ் ஆகியோரும், கலந்து, கொண்டனர். “ஊராட்சி மன்ற செயலாளர்” முத்து கிருஷ்ணன், ” நன்றி” கூறினார்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் ” “மேலப்பாளையம்” ஹஸன்.
